ஐஎஸ்எல் கால்பந்து இறுதி போட்டிக்கு சென்னை தகுதி

சென்னை:

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் இறுதிபோட்டிக்கு சென்னை அணி முன்னேறியது. 2வது சுற்று அரையிறுதியில் கோவாவை 3-:0 என்ற கணக்கில் வீழ்த்தியது.

இந்தியாவில் ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் 4வது ‘சீசன்’ இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. முதல் அணியாக பெங்களூரு இறுதிபோட்டிக்கு முன்னேறியது. சென்னை-கோவா அணிகள் மோதிய 2வது சுற்று அரையிறுதி இன்று சென்னையில் நடந்தது.

இதில் 3:-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணி வெற்றி பெற்றது. ஏற்கனவே நடந்த முதல் சுற்று அரையிறுதி கோல் கணக்கையும் சேர்த்து 4-1 என்ற முன்னிலையுடன் சென்னை அணி இறுதிபோட்டிக்கு முன்னேறியது. 17ம் தேதி நடக்கும் இறுதிபோட்டியில் பெங்களூருவை அதன் சொந்த மண்ணில் சென்னை எதிர்கொள்கிறது.

Tags: Chennai qualifies for isl Football Final, ஐஎஸ்எல் கால்பந்து இறுதி போட்டிக்கு சென்னை தகுதி