இன்று ஊரடங்கை மீறியதாக 826 வழக்குகள் பதிவு செய்த சென்னை காவல்துறை

Must read

சென்னை

ன்று ஒரே நாளில் சென்னையில் ஊரடங்கை மீறியதாக காவல்துறை 826 வழக்குகள் பதிவு செய்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதில் சென்னையில் அதிக அளவில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

இதை கட்டுக்குள் கொண்டு வர இன்று முதல் நான்கு நாட்களுக்குச் சென்னை மாவட்டத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் இன்று  பலர் ஊரடங்கு விதிகளை மீறி வெளியில் சென்றுள்ளனர்.

இதையொட்டி சென்னை காவல்துறை 826 வழக்குகள் பதிவு செய்துள்ளது.

சாலையில் சுற்றியவர்களிடம் இருந்து 543 இரு சக்கர வாகனங்கள், 24 ஆட்டோக்கள், 35 கார்கள் என 602 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

More articles

Latest article