சென்னை: தமிழகத்தில் கொரோனா நோயை தடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போலீசார் சிகிச்சை பெறும் பகுதிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்து பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: பாதுகாப்பு, கண்காணிப்பு பணியின் போது முகக்கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியை காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டும்.
கொரோனாவுக்கு தமிழகத்தில் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவல் துறை சார்பில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போலீஸ் வாகனம் மூலம் மக்களுக்கு தகுந்த அறிவுரை வழங்கப்படுகிறது எனவும் கூறினார்.
Patrikai.com official YouTube Channel