சென்னை: சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நரம்பியல் நிபுணர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளை புரட்டி போட்டிருக்கிறது கொரோனா வைரஸ். 200க்கும் மேற்பட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் 16,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்திலும் கொரோனா வைரஸின் தாக்கம் பெரிய அளவில் உள்ளது. தமிழகத்தில் 1477 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. சென்னையில் இன்று மட்டும் 4 மருத்துவர்கள் உட்பட 50 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நரம்பியல் நிபுணர் தற்போது சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளார். சென்னையின் பிரபல தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராக இருந்த அவரின் மரணம், தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.