சென்னை: நேரு உள் விளையாட்டு அரங்கத்தையும், 600 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு வார்டாக மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே உள்ளது. நேற்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 759 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
அதனால் தமிழகத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,512 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு அதிக கொரோனா பாதிப்பு பதிவானது நேற்றுதான் முதல்முறை. இதையடுத்து,கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்களை கண்காணிக்கும் வகையில் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கம் கொரோனா வார்டாக மாற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது.
கொரோனாவுக்கு எதிராகத் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவந்தபோதிலும் வைரஸ் பரவலின் வேகம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாகச் சென்னையில் மிக அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.