சென்னை:

சென்னை பேசின்பிரிட்ஜ் பணிமனையில் சதாப்தி ரெயில் பெட்டிகள் நவீனப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இதில் ஒரு பெட்டியில் பணி முடிக்கப்பட்டு இன்று காலை 6 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூரு புறப்பட்டுச் சென்ற சதாப்தி ரெயிலில இணைக்கப்பட்டது. இந்த பெட்டிக்கு ஸ்வர்ண சதாப்தி என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நவீன ஏசி சேர் கார் பெட்டியில், 3 சிசிடிவி கேமரா, வைஃ-பை, தானியங்கி கதவுகள், எல்.இ.டி. விளக்குகள், உள்புற வேலைப்பாடு, வெளியேறும் பகுதியில் உடைமைகளுக்கு இட வசதி, லேப்-டாப் வைக்க இருக்கைக்கு பின்னால் தனி வசதி, ஸ்பிரே, தமிழ்நாடு சுற்றுலா தள படங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

தீயணைப்பு கருவி, பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி குறியீடு வசதி, வைஃ-பை மூலம் மேஜிக் பாக்ஸ் இணைய தளத்தில் லேப்டாப், செல்போன்களில் 100 திரைப்படங்கள், பிராந்திய மொழி டிவி நிகழ்ச்சிகளை பார்க்கலாம். பாடல்கள், கார்ட்டூன் படங்களும் உள்ளன.

இதுகுறித்து சென்னை கோட்ட மூத்த மெக்கானிக்கல் இன்ஜினியர் பரிமளகுமார், உதவி கோட்ட மெ க்கானிக்கல் இன்ஜினியர் யர் துஷார் ஆதித்யா, பேசின்பிரிட்ஜ் பணிமனை ரெயில் பெட்டி பிரிவு தலைமை அதிகாரி சுரேஷ் ஆகியோர் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், ‘‘சதாப்தி ரெயில் பெட்டிகள் ரூ.2 கோடியே 80 லட்சம் செலவில் நவீன வசதிகளுடன் ஸ்வர்ண சதாப்தி ரெயில் பெட்டிகளாக மாற்றப்பட உள்ளன. ஒரு பெட்டிக்கு ரூ.10 லட்சம் செலவாகிறது. ஒரு ஏசி பெட்டி 5 நாட்களின் நவீனப்படுத்தப்படுகிறது.

மைசூரு சதாப்தி ரெயில் பெட்டிகள் அனைத்தும் மார்ச் மாதத்துக்குள் நவீனப்படுத்தப்படும். இதன் பின்னர் சென்னை&-கோவை சதாப்தி ரெயில் பெட்டிகள் மேம்படுத்தப்படும். ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.