சென்னை:

சென்னை அருகே நடைபெற்று வரும் ராணுவ கண்காட்சியில் இந்தியா ரஷ்யா இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

சென்னை இசிஆர் சாலையில் திருவிடந்தையில் நடைபெற்று வரும்  ‘டிஃபெக்ஸ்போ18’ என்ற  ராணுவத் தளவாடக் கண்காட்சியில், ரஷிய உதவியுடன் இந்தியாவிலேயே தளவாட பொருட்கள்  உற்பத்தி செய்வது தொடர்பாக இரு நாட்டு அதிகாரிகளிடையே  7 புரிந்துணர்வு  ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

இந்த ஒப்பந்தங்கள் இந்தியாவின் பிரபல நிறுவனமான எல்அன்டிக்கும்,  நிறுவனமான ஜேஎஸ்சி ஏஜிஏடி ஆகியவற்றுக்கு இடையே போடப்பட்டுள்ளன.

அதன்படி,    இந்திய கடற்படைக்கான நீருக்கடியில் பயன்படுத்தக்கூடிய மேடை தயாரிப்பு, இந்தியாவில் ராக்கெட்டுகளை இணைந்து தயாரிப்பது , சு-30எம்கேஐ போர் விமானத்துக்கான நவீன சாதனங்கள் தயாரிப்பு , இந்திய ராணுவத்திற்கான டி90எஸ் மற்றும் டி72 டாங்குகளின் தேவைக்கான உதிரி பாகங்கள் மற்றும் தளவாடங்கள்  மேலும் ஸ்பேஸ் எரா மற்றும் ரேடியோ எலெக்ட்ரானிக் டெக்னாலஜீஸ் நிறுவனங்கள் எஸ்-யூ 30 எம்கேஐ மற்றும் எம்ஐ 8, எம்ஐ 17, மற்றும் எம் 35 வகை ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றின் தயாரிப்பு மற்றும் இயக்கத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

ரஷிய நிறுவனமான ஆஸ்க்ரோசோமரைன் மற்றும் ஜேஎஸ்சி ஏஜிஏடி ஆகிய நிறுவனங்களுடன் இந்திய போர்க் கப்பல்களில் பயன்படுத்தப்படும் ரேடார் சாதனங்களைத் தயாரிப்பது மற்றும் மேம்படுத்தலுக்கான ஒப்பந்தமும் இருதரப்புக்கு இடையே செய்து கொள்ளப்பட்டது.

கிரஷ்னே டிஃபென்ஸ் டெக்னாலஜீஸ் மற்றும் அவியேடெக் எண்டர்பிரைசஸ் ஆகிய ரஷிய நிறுவனங்கள், இந்திய கடற்படைக் கப்பல்களுக்கான உதிரி பாகங்களை தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தம்.

இவ்வாறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக ராணுவம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது