சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மூன்று வழித்தடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த பணிகளில் வழித்தடம் 4 மற்றும் வழித்தடம் 5 ஆகிய வழித்தடங்களில் குறிப்பிட்ட தூரம் பணிகள் நிறைவு பெரும் நிலையில் உள்ளது.
பூந்தமல்லி – வடபழனி இடையிலான 4வது வழித்தடத்தில் தண்டவாளங்கள் அமைக்கும் பணி போர்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து சோதனை ஓட்டம் மற்றும் நடைமேடைகள் அமைக்கப்பட உள்ளன இதையடுத்து ஆய்வுக்குப் பின் பிப்ரவரி மாத இறுதியில் ரயில்வே வாரியத்தின் அனுமதிக்கு விண்ணப்பிக்கப்படும் என்றும் அனுமதி கிடைத்தவுடன் போக்குவரத்து தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தப் பணிகள் முடிவடைந்ததும், பூந்தமல்லி – வடபழனி இடையே ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தவிர, வழித்தடம் 5ல் கோயம்பேடு – சென்னை வர்த்தக மையம் இடையே 2026 ஜூன் மாதம் போக்குவரத்து தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேவேகத்தில் சென்னை வர்த்தக மையம் – சோழிங்கநல்லூர் (வழித்தடம் 5) மற்றும் வடபழனி – பனகல் பூங்கா (வழித்தடம் 4) ஆகிய பணிகளை தீவிரப்படுத்துவதன் மூலம் 2026 டிசம்பருக்குள் திறக்க திட்டமிட்டுள்ளது.
இவை தவிர, கோயம்புத்தூர் & மதுரை மெட்ரோ திட்டங்களை ஓரிரு வாரங்களில் மத்திய அரசுக்கு மீண்டும் அனுப்ப மெட்ரோ ரயில் நிர்வாகம் தயாராகி வருகிறது.
வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் திட்டத்தை மெட்ரோ ரயிலுடன் இணைக்கும் திட்டத்தையும் விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் கூறப்படுவதை அடுத்து இந்த மாதம் திறக்கப்படுவதாக இருந்த இந்த ரயில் பாதை மேலும் சில நாள் தள்ளிப் போக வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.
[youtube-feed feed=1]