சென்னை

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சேவை நேரத்தில் மாற்றம் செய்துள்ளது.

சென்னை நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது.  தற்போது பலரும் இந்த சேவையைப் பயன்படுத்துகின்றனர்.  மேலும் நகர் முழுவதிலும் மெட்ரோ ரயில் இயக்கத் தேவையான கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில்,

”சென்னை மெட்ரோ ரயிலில் ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதால் நாளை முதல் ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.  

இதில் காலை 5 முதல் மதியம் 12 வரை, இரவு 8 முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.  இதைப் போல் மதியம் 12 முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.”

என்று அறிவிக்கப்பட்டுள்ளது.