சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய வழங்கப்பட்டு வந்த ஒரு நாள் பாஸ் மற்றும் 30 நாள் பயண அட்டைகள் நிறுத்தப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சுற்றுலா பயணிகள் மற்றும் பணி நிமித்தமாக அதிக இடங்களுக்கு பயணம் செய்பவர்களுக்கு இந்த பாஸ்கள் மிகவும் வசதியாக இருந்தது.

இந்த நிலையில் பிப்ரவரி 1ம் தேதி முதல் இந்த இரண்டு பயண அட்டைகளும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது மெட்ரோ ரயில் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விம்கோ நகர் – ஏர்போர்ட் மற்றும் சென்னை சென்ட்ரல் – பரங்கிமலை ஆகிய இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.

தினமும் லட்சக்கணக்கானோர் இந்த வழித்தடங்களில் பயணம் செய்து வருகின்றனர்.

சுற்றுலா அட்டைகள், டிஜிட்டல் பயணச்சீட்டு, QR குறியீடு பயணச்சீட்டு, ஒற்றை பயண டோக்கன்கள், தேசிய பொது போக்குவரத்து அட்டை ஆகியவை தற்போது பயன்பாட்டில் உள்ளது.

இந்த நிலையில் ரூ. 100க்கு வழங்கப்பட்டு வந்த ஒரு நாள் சுற்றுலா அட்டைகள் மற்றும் ரூ. 2500க்கு வழங்கப்பட்டு வந்த 30 நாள் சுற்றுலா அட்டைகள் பிப்ரவரி 1ம் தேதி முதல் வழங்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.