சென்னை:
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் திரும்பப் பெறப்பட்டது.

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகச் சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் முன்பு எச்சரித்திருந்தது.
இதையடுத்து சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. சென்னையில் எதிர்பார்த்த அளவுக்குக் கனமழை பெய்ய வாய்ப்பு இல்லை என்று தெரிய வந்ததை அடுத்து, ரெட் அலர்ட் வாபஸ் பெறப்படுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டு, ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel