சென்னை: ஜூன் 30ஆம் தேதியுடன் சென்னை ‘ஃபோர்டு’ கார் தயாரிப்பு நிறுவனம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரண மாக,  2500 தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க கார் நிறுவனமான ஃபோர்டு இந்தியாவில்  குஜராத் மற்றும் தமிழகத்தில் கார் தயாரிப்பு  ஆலைகளை நடத்தி வருகிறது. ஆனால், இந்த நிறுவனத்தின் கார்கள் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை செய்யாததால், கடுமையான நஷ்டத்தை ஏற்படுத்தியது. இங்கு ‘ECOSPORTS’, எண்டவர்’. ‘ஃபிகோ’ மாடல் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லாததால் கார் உற்பத்தியை நிறுத்திவிட்டு இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக, கடந்த 9ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது ஃபோர்டு நிறுவனம்.  5ஆயிரத்து 161 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்த நிலையில், 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டதே இம்முடிவுக்கு காரணம் என்றும் விளக்கமளிக்கப்பட்டது.

ஃபோர்டு தொழிற்சாலையை நம்பியுள்ள 4 ஆயிரம் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மறைமுகத் தொழிலாளர்களுக்கும் இச்செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்விவகாரத்தில் ஊழியர்களின் பணி பாதுகாப்பு குறித்த தொழிற்சங்க த்தின் முக்கிய கோரிக்கைகளை ஏற்க ஃபோர்டு நிறுவனம் மறுத்துவிட்டது. அதனால் அவர்களது வாழ்வாதாரமே கேள்விக்குறியான நிலையில் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது ஃபோர்டு நிறுவனம்.
இதையடுத்து, ஃபோர்டு கார் தயாரிப்பு ஆலையை  மூடுவதாக கடந்தஆண்டு (2021)  அறிவித்திருந்தது. இதனால், ஆயிரக்கணக்கான தொழி லாளர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து,  சென்னை மறைமலை நகரில் உள்ள ஃபோர்டு இந்தியா பிரிவை கையகப்படுத்துவது குறித்து தமிழக அரசு டாட்டா குழுமத்துடன் கலந்துரையாடியது.

இந்த நிலையில், மறைமலைநகர் கார் ஆலையை ஜூன் 30 ஆம் தேதியுடன்  மூடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலையில் சுமார் 2500 தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.