சென்னை:

கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் திறந்தவெளி மற்றும் வளசரவாக்கம் பகுதியில் வீடுகளுக்கே சென்று  முடிவெட்டிய சலூன் கடை உரிமையாளருக்கு  கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவரிடம் முடிவெட்டியவர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

சென்னையில் வளசரவக்கம் பகுதியில் சலூன் கடை நடத்தி வரும் 36வயது இளைஞர் ஒருவர், ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால், கோயம்பேடு பகுதியில் திறந்த வெளியில் பலருக்கு முடிவெட்டி, சவரம் செய்தல் போன்றவற்றை செய்துள்ளார். மேலும்,  வளசரவக்கம், நேர்குன்றம் மற்றும் கோயம்பேடு பகுதிகளில் பலரது வீடுகளுக்குச் சென்றும் முடிவெட்டியுள்ளார். தினசரி 10 முதல் 15 பேருக்கு அவர் முடிவெட்டியிருப்பதாக கூறப்படுகிறது.

இவருக்கு சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்த நிலையில், கடந்த 23ந்தேதி கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதில், அ வருக்கு சோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

இதையடுத்து, அவரிடம் முடிவெட்டியவர்களை  காவல்துறையினரும், சுகாதாரத்துறையினரும் தேடி வருகின்றனர். இதுவரை 32 பேர் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டும், அவர்களின் ரத்த மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்டு   உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.