சென்னை:

கோயம்பேடு பூ மார்க்கெட்டில் 3 பேருக்கு கொரோனா உறுதியானதைத் தொடர்ந்து, அங்கு கடைகளை வைத்திருக்கும் விற்பனையாளர்கள் மற்றும் சுமை தொழிலாளர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

ஊரடங்கு காரணமாக சென்னையில் 29ந்தேதி வரை முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இருந்தாலும் அத்தியாவசியத் தேவைகாகக கோயம்பேடு சந்தை திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதனால், ஏராளமான பொதுமக்கள்  கோயம்பேடு சந்தையில் கூடி பழங்கள், காய்கறிகள், பூக்கள் வாங்கிச் செல்கின்றனர்.

அங்கு சமூக விலகலை கடைபிடிக்காமல் ஏராளமானோர் கூடியதால் பூ மார்க்கெட் வியாபாரிகள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதனால் கோயம்பேடு மார்க்கெட்டை தற்காலிகமாக வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் வணிகர்களுடன் பேச்சுவார்ர்தை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில்,  கோயம்பேடு மார்க்கெட்வியாபாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நடமாடும் சோதனை நிலையிம் மூலம் கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.