சென்னை

ழை நீர் சூழ்ந்துள்ளதால் சென்னை மேட்லி சுரங்கப்பாதை போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது.

சென்னையில் சற்றே நின்றிருந்த மழை மீண்டும் பெய்யத் தொடங்கி உள்ளது.  இன்று சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் மழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.   இன்று காலை சென்னை பெருநகரக் காவல் பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில்,

“பத்திரிகை செய்தி – 10-11-2021 காலை 6 மணி

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை நகரப் போக்குவரத்தின் தற்போதைய நிலவரம்

  1. மழைநீர் பெருக்கு காரணமாக மூடப்பட்டுள்ள சுரங்கப்பாதை : அ) மேட்லி சுரங்கப்பாதை
  2. சாலையில் பள்ளம் : திருமலைப் பிள்ளை ரோடு, காமராஜர் இல்லம் முன்பு சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.  இதனால் வள்ளுவர் கோட்டம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.   வாணி மகால் – பென்ஸ்பார்க் சந்திப்பில் வாகனங்கள் திருப்பி விடப்படுகிறது.  வள்ளுவர் கோட்டத்தில் இருந்து வாணி மகால் செல்லும் வாகனங்கள் திருமலைப் பிள்ளை ரோட்டில் செல்லலாம்.
  3. மரங்கள் எதுவும் விழவில்லை”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.