ஸ்ரீ சௌந்தரேஸ்வரர் கோயில் ,கோவூர், சென்னை
இக்கோயில் சென்னையில் உள்ள நவகிரக தலங்களில் புதன் (mercury ) தலமாகும்.  இந்திரனின் வாகனமான ஐராவதத்தினால் சீரமைக்கப்பெற்ற தீர்த்தமாதலால் ஐராவத தீர்த்தம் என்று அழைக்க பெற்றது .  கஜபிருஷ்ட விமானத்தின் கீழ் இறைவன் பெயருக்கு ஏற்றபடி மிக அழகுடன் காட்சி தருகிறார்  தியாக பிரம்மம் தனது பஞ்சரத்ன கீர்த்தனையில் இத்தலத்தின் இறைவனைப் பற்றி பாடியுள்ளார்
.
தல புராணம் :
காமாட்சி அம்மன் மாங்காட்டில் கடும் தவம் புரிந்தார் அப்போது அவரின் தவாக்கினி சுற்றிலும் உள்ள மரங்கள் மற்றும் தாவரங்களைக் கருகச் செய்தது ,வயல்கள் பாளம் பாளமாக வெடித்தது.இதைக் கண்ட ரிஷிகள் மகா விஷ்ணுவிடம் முறையிட்டனர் . அவர் மகா லக்ஷ்மியைப் பூலோகம் அனுப்பினார் .
அம்பாளுக்கு இறைவன் காட்சி கொடுத்தாலே தவம் பூர்த்தியாகும் என்பதால் லட்சுமி பசு வடிவமாகி லிங்கத்தைத் தேடி அலைந்தார் . ஒரு சுயம்பு லிங்கத்தைக் கண்டுகொண்ட திருமகள் அதன் மேல் பாலை சொரிந்தார் .திருமகள் இல்லாததால் விஷ்ணு உறக்கத்தில் ஆழ்ந்தார் . இதனால் பண்டிதர்களுக்குப் பணம் இல்லை , எல்லோரும் புத மந்திரம் ஜபிக்க ,புதன்  அவர்களுக்காக லக்ஷ்மியைத் தேடி பூலோகம் வந்தார் .
திருமகளின் கருணையைக் கண்டு ஈசன் பசுவிடம் என்ன வரம் வேண்டும் என வினவினார் . அவர்களோ மலைமகளுக்கு அருளவேண்டும் என்று கேட்டார் .அதற்கு இறைவன் சக்தியைக் காஞ்சிக்குச் சென்று சிவபூஜை செய்யச்சொன்னார் . இறைவனின் சிரசிலிருந்து கங்கையைப் பொழிந்து இந்த இடங்களைக் குளிர செய்தார் .லட்சுமி சுய வடிவுக்குத் திரும்பி ஈசனுடன் புதனுக்குக் காட்சி தந்தார் .
கோ என்றால் பசு என்ற மறு பெயர் உண்டு , சிவ ஆராதனை நடத்திய இடம் என்பதால் கோவூர் என்ற பெயர் பெற்றது . பசுவுக்கு தன் சுயம்பு திருமேனியைக் காட்டியதால் திருமேனிஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார் . வடமொழியில் சௌந்தராம்பிகை என்று அழைக்கப்படுகிறார் .
புதன் தகவல் :
அழகானவர் , சந்திரன் ,தாரைக்குப் பிறந்தவர் , பிடித்த நிறம் பச்சை ,ரத்தினம் மரகதம் ,
ஜாதகத்தில் உச்சத்திலிருந்து சுப கிரகணங்களால் பார்க்கப்பட்டால் கல்வியில் சிறந்து விளங்குவர், ஜோதிட நிபுணர் ,பேச்சாற்றல் மிக்கவர்கள் ,கணிதம் ,மருத்துவம் ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்கள் இவரின் பார்வையினால் மட்டும் நடக்கும்.மிதுனம் ,கன்னி இவரின் சொந்த வீடு . கன்னி உச்ச வீடு ,மீனம் நீச வீடு ,சூரியன் ,சுக்கிரன் இருவரும் நண்பர்கள் ,சந்திரன் எதிரி ஆவர்.
அமைவிடம்:
போரூர் குன்றத்தூர் சாலையில் கோவூர் ஊரின் பேருந்து நிலையத்தின் உள்ளே உள்ளது.