ழுகுமலை

பாஜக நிர்வாகி உள்ளிட்ட 6 பேர் புகையிலை பொருட்களைப் பதுக்கி வைத்திருந்ததற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புகையிலை பொருட்களுக்குத் தமிழக அரசு தடை விதித்துள்ள போதும் அவைகள் ரகசியமாக விற்கப்படுகின்றன.   இதையொட்டி தமிழக காவல்துறையினர் சோதனை நடவடிக்கைகளை திவிரமாக்கி உள்ளனர்.  அவ்வகையில் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே தடை செய்யப்படப் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்துள்ளதாகக் கிடைத்த ரகசிய தகவலையொட்டி சோதனை நடந்தது

இந்த சோதனையில் கழுகுமலை கொத்தகுளம் சாலையில் கோபிநாத் என்பவரது தோட்டத்தில் ஒரு சிலர் காரில் இந்த பொருட்களை மூட்டை மூட்டையாக ஏற்றிக் கொண்டிருந்தது கண்ட்பிடிக்கப்பட்டப்து .  காவல்துறையினர் இவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.   பிறகு அவர்களிடம் தீவிர விசாரணை நடந்தது.

இந்த விசாரணையில் அவர்கள் கழுகுமலையைச் சேர்ந்த சந்திரசேகர் (38), அருள்ராஜ் (37), நாராயணகுமார் (37),  சந்தனமாரிமுத்து (30), தோட்ட உரிமையாளர் பழங்கோட்டை கோபிநாத் (34) என்பதும், காரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்ததும் தெரிய வந்தது.

அவர்களது குடோனில் 41 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 615 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.  விசாரணையில் இதன் மதிப்பு ரூ.8 லட்சத்து 20 ஆயிரம் . மதுரையில் இருந்து புகையிலை பொருட்களைக் கடத்தி வந்து தோட்டத்தில் பதுக்கி வைத்து கடைகளுக்கு சப்ளை செய்ய முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த புகையிலை பொருட்கள் பதுக்கல் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சந்திரசேகர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக வர்த்தக பிரிவு செயலாளர் ஆவார். இவர் சமீபத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கழுகுமலை பேரூராட்சி 13வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார்.