சென்னை:

அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை தளர்த்தி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் தலைமையில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறுகையில்,

‘‘அங்கீகாரமில்லாத வீட்டுமனைகளை வரன் முறை படுத்துவதற்கான புதிய விதிகளின் கீழ் பத்திரப்பதிவு செய்யலாம். ஏற்கனவே வீட்டு மனைகளாக பதிவு செய்யப்பட்ட நிலங்களை மறுபதிவு செய்யலாம். – 21.04.2017 முதல் இன்று வரை பதிவு செய்யப்பட்ட பதிவுகளும் சட்டவிரோதமாகும்.

9.9.2016ம் தேதி முதல் 28.3.2017ம் தேதி இடையிலான பத்திரப்பதிவு சட்டவிரோதம். இறுதித் தீர்ப்பு வரும் வரை பத்திர பதிவுகள் அனைத்தும் நீதிமன்றத்துக்கு உட்பட்டதாகும். பத்திரவு பதிவு செய்தவற்கான தடை தளர்த்தப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை ஜூன் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது’’ என்று தெரிவித்தனர்.