சென்னை:

மிழக சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ரூ.2000 நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்தார்.

இது பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு என்று கூறி வழக்கு தொடரப்பட்டது. இதை வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்து உள்ளது. இதன் காரணமாக ஆளுங்கட்சி மகிழ்ச்சி அடைந்துள்ளது.

தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  தமிழகத்தில் உள்ள ஏழை விவசாயிகள், தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு, தலா ரூ.2000 ஒரே தவணையாக தரப்படும்  என்றும், இந்த பிப்ரவரி மாதம் முதலே இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவித்தார்.

இந்த அறிவிப்பு பாராளுமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு அறிவிக்கப்பட்டதாக எதிர்க்கட்சி கள் குற்றம் சாட்டிய நிலையில்,  தமிழக அரசன்  உத்தரவுக்கு எதிராக, சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள், மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் அமர்வு முன்னிலையில் விசாரிக்கப்பட்டது. விசாரணையின்போது, ஏழை குடும்பங்கள் கணக்கெடுப்பு தவறாக உள்ளது. 18 லட்சம் குடும்பங்கள்தான் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளது. ஆனால் 60 லட்சம் பேருக்கு நிதி உதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தேர்தலுக்கான உத்தரவாகும் என்று, சட்டப் பஞ்சாயத்து சார்பில் வாதிடப்பட்டது.

அதைத்தொடர்ந்து வாதாடிய அரசு  வழக்கறிஞர், 2006ம் ஆண்டு முதல் ஏழை குடும்பங்களுக் கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்காக அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த கணக்கெடுப்பு படிதான் அரசு இந்த முடிவுக்கு வந்த என்றும், அதற்கான ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டது.

தமிழக அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அமர்வு, சட்டப் பஞ்சாயத்து இயக்கம் மனுவை தள்ளுபடி செய்தது.

வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால் ஆளுங்கட்சி மகிழ்ச்சியில் துள்ளுகிறது.. ஆனால் எதிர்க்கட்சிகளோ செய்வதறியாது திகைத்து நிற்கிறது…