சென்னை: ரூ.1,330 கோடி நிலக்கரி டெண்டருக்கு எதிரான விகோ நிறுவனத்தின் மேல்முறையீடு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழக மின் வாரியத்திற்கு வெளிநாடுகளிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்வது தொடர்பான 1,330 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்ற மேல்முறையீடு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது: டெண்டருக்கான கால அவகாசம், ஏற்கனவே 15 நாட்கள் நீடிக்கப்பட்டு உள்ளது. வர்த்தக இதழிலும் வெளியிடப்பட்டு உள்ளது. எனவே மனுதாரருக்கு வழக்கு தொடர தகுதி இல்லை என்று கூறினர். பின்னர் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும் அவர்கள் உத்தரவிட்டனர்.