சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்கள் தவிர வேறு தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.  ஆனால், பொதுக்குழுவில் நீதிமன்ற உத்தரவைமீறி,  அனைத்து தீர்மானங்களும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலை யில், அதிமுக அவைத் தலைவர் நியமிக்கப்பட்டனர். மேலும், பல மாற்றங்களுக்கும் ஒப்புதல் பெற்றப்பட்டது. இதன் காரணமாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் பறிக்கப்பட்டது

இதை எதிர்த்து, ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர் சண்முகம், எடப்பாடி பழனிசாமி மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் முன்னதாக, உச்சநீதிமன்றம் அந்த வழக்குக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இதனால் வழக்கு இன்று விசாரணை செய்யப்படும் என ஒத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்து விட்டதால் அவதூறு வழக்கை நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர்மோகன் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.