இன்று பிறந்தநாள் காணும் தோனிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…

Must read

சென்னை:  ‘இன்று பிறந்தநாள் காணும் தோனிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். லட்சக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கை நீங்கள் என புகழாரம் சூட்டி உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே அணியின் கேப்டனமான மகேந்திரசிங் தோனிக்கு இன்று தனது 41வது பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில்,  தோனிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

2004ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமான தோனி, 2019ம் ஆண்டு ரை இந்திய அணிக்காக 90 டெஸ்ட், 350 ஒருநாள், 98 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 17 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார். தோனியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய ரசிகர்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், “ உங்கள் இணையற்ற சாதனைகள், எளிய கிராமப்புற பின்னணியில் இருந்து வரும் லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்கள் கனவுகளைத் தொடர நம்பிக்கையை அளித்துள்ளது.சென்னக்காக நீங்கள் விளையாடுவதை பார்க்க ஆவலாக இருக்கிறேன். பிறந்த நாள் வாழ்த்துகள் தோனி” என்று பதிவிட்டுள்ளார்.

தோனியின் பிறந்தநாளுக்கு அமைச்சர் சேகர்பாபுவும் டிவிட் பதிவிட்டுள்ளார். அதில்,  ‘கிரிக்கெட்டின் தல எம்.எஸ்.தோணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! சென்னையில் ஹெலிகாப்டர் பறப்பதைப் பார்க்க காத்திருக்கிறோம்’ என பதிவிட்டுள்ளார்.

More articles

Latest article