சென்னை

விதாயினி லீனா  மணிமேகலை பாஸ்போர்ட் முடக்கம் குறித்து மண்டல அதிகாரியிடம் சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.

பிரபல கவிதாயினி  லீனா மணிமேகலை தமிழ் இலக்கிய உலகிலும் திரையுலகிலும் மிகவும் பிரபலமானவர் ஆவார். இவர் இயக்கிய மாடத்தி திரைப்படம் ஜூன் 24 அன்று ஓடிடி தளங்களில் வெளியாகி உள்ளது.   இதில் சலவை செய்யும் பெண் குறித்துப் பேசப்பட்டுள்ளது., இந்த படத்தைப் பல விமர்சகர்கள் பாராட்டி உள்ளனர்.

பிரபல இயக்குநர் சுசி கணேசன் மீது லீனா மணிமேகலை பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்தது பரபரப்பை அளித்தது.  அந்த குற்றச்சாட்டுப் பொய்யானது எனத் தெரிவித்த சுசி கணேசன் தன் மீது தேவையற்ற அவதூறு கிளப்புவதாக லீனா மணிமேகலை மீது வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் அடிப்படையில் லீனா மணிமேகலையின் பாஸ்போர்ட்டை முடக்க சைதாப்பேட்டை குற்றவியல், நீதிமன்றம் உத்தரவிட்டது.  ஆனால் தாம் ஆராய்ச்சி பணிக்காக யார்க் பல்கலைக்கழகம் செல்ல உள்ளதால் தடையை ரத்து செய்ய லீனா கோரிக்கை விடுத்தார்.  எனவே சென்னை உயர்நீதிமன்றம் இது குறித்து மண்டல பாஸ்போர்ட் அதிகாரியிடம் விளக்கம் கேட்டுள்ளது.