சென்னை

மிழக அரசு புதிய பேருந்துகள் வாங்கும் திட்டத்துக்குத் தடை விதிக்க மறுத்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள், ரயில், பேருந்துகளில் மாற்று திறனாளிகளுக்கான வசதிகள் செய்து தரவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது நினைவு இருக்கலாம்.  அந்த உத்தரவின் அடிப்படையில் ஒரு வழக்கு மனு ஒன்று பதியப்பட்டது.

அந்த மனுவில், “தமிழக அரசு 4000 புது பேருந்துகளை ஜெர்மன் நாட்டு நிதி உதவியுடன் வாங்க உள்ளது.  இதில் 10% பேருந்துகள் மாற்று திறனாளிகள் எளிதில் அணுகும் வசதியுடனும் 25% பேருந்துகள் சக்கர நாற்காலிகளுடன் பயணம் செய்யும் வசதியுடனும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஆனால் சென்னை போன்ற பெருநகரங்களில் இது சாத்தியமற்றதாகும்.

மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலிகளுடன் ஏறி இறங்கக் கூடுதல் நேரமாகும்.   எனவே உயர்நீதிமன்றம் ஏற்கனவே வெளியிட்டுள்ள உத்தரவின்படி அனைத்து பேருந்துகளும் தாழ்தள வசதியுடன் இருக்க வேண்டும்.  ஆகவே தமிழக அரசு புது பேருந்துகள் வாங்குவதற்கு தடை விதிக்கவேண்டும்” எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.  அவர்கள் புது பேருந்துகள் வாங்கத் தடை விதிக்க மறுத்து விட்டனர்.   மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்ய வசதியாகப் பேருந்துகள் தாழ் தள வசதியுடன் இருக்கும் என்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.