தமிழக அரசு ஊழியர் ஓய்வு வயது 60 ஆக்கியதற்குத் தடை இல்லை : உயர்நீதிமன்றம்

Must read

சென்னை

மிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய ஆணைக்குத் தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 ஆக இருந்தது.  அதைத் தமிழக அரசு மாற்றி ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டது.  இந்த அரசாணையில்  இனி தமிழக அரசு ஊழியர்கள் 59 வயதுக்குப் பதிலாக 60 வயதில் ஓய்வு பெறுவார்கள் எனவும் அவர்கள் 60 வயதை அடைந்த அடுத்த நாளே ஓய்வூதியர்களாக கருதப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

இந்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தொடரப்பட்டது.  அந்த வழக்கு மனுவில் தமிழக அரசு ஊழியர்களின் வயதை 60 வயதாக உயர்த்தக் கூடாது எனவும் இதற்கான அரசாணைக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.  இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வெளி வந்துள்ளது.

அதன்படி, ”தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தி அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க முடியாது.  ஏனெனில் அரசின் கொள்கை முடிவுகளில் உயர்நீதிமன்றம் தலையிட முடியாது” என அறிவித்துள்ளது.  இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் இந்த அரசாணையை எதிர்த்த மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் மற்றும் 2 ஆண்டுகளுக்கு பொது நல வழக்கு தொடர தடை விதித்துள்ளது.

More articles

Latest article