சென்னை: சென்னை உயர்நீதி மன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் எஸ்.கே.கிருஷ்ணன் திமுகவில் இணைந்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் எஸ்.கே.கிருஷ்ணன் திமுகவில் இணைந்தார்.

அப்போது கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர்கள் க.பொன்முடி, எம்.எல்.ஏ., அந்தியூர் செல்வராஜ், எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி, எம்.பி, தலைமைக் கழக சட்ட ஆலோசகர் என்.ஆர்.இளங்கோ, எம்.பி., சட்டதிட்டத் திருத்தக்குழுச் செயலாளர் பி.வில்சன், எம்.பி., வழக்கறிஞர் விக்டர் ஆகியோர் உடனிருந்தனர்.

[youtube-feed feed=1]