சென்னை: சென்னையின் வடக்கே வங்காள விரிகுடாவில் பூகம்பம் எற்பட்டதைத் தொடர்ந்து, சென்னையின் சில பகுதிகளில் இன்று மதியம் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக நில அதிர்வுக்கான தேசிய மையம் வெளியிட்ட தகவலின்படி, வங்காள விரிகுடாவில் மதியம் 12.35 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.1 அளவான இந்த நிலநடுக்கம், சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது,
வங்கக் கடலில் நிலநடுக்கம் சென்னையிலிருந்து கிழக்கே 320 கிமீ தொலைவில் கடலுக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதன் பாதிப்பே சென்னை உள்பட கடலோர பகுதிகளில் உணர்ந்தாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையின் கடற்கரைபகுதிகளான பெசன்ட் நகர், பட்டிணப்பாக்கம், ஆழ்வார்பேட்டை போன்ற சில பகுதிகளில் லோசான அதிர்வு காணப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
[youtube-feed feed=1]