சென்னை:
சொத்துக்காக பெற்ற தந்தையையே கொலை செய்ய முயன்ற டாக்டர் மகள் பற்றி அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
சென்னை கீழ்ப்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் ராஜகோபால். அவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இருவரும் டாக்டர்கள். வயது முதிர்வு காரணமாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

சம்பவத்தனன்று, அவரது மகள் டாக்டர் சுதா, சொத்துக்காக தந்தையை கொலை செய்ய முயற்சி செய்தது அந்த அறையில் வைக்கப்பட்டருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது.
காமிரா பதிவில், டாக்டர் சுதா தனது தந்தையின் கைவிரல் ரேகைகளை சில பத்திர பேப்பர்களில் பதிவு செய்ததும், தந்தைக்கு மருந்து சென்று கொண்டிருந்த குழாயை அடைக்க முயற்சி செய்ததும் பதிவாகி உள்ளது.
நோயாளியை கண்காணிக்கும் நர்ஸ் திடீரென அறைக்குள் வந்ததால் டாக்டர் சுதா, தனது தந்தையின் கைவிரலில் ஒட்டியிருந்த மையை அழித்துவிட்டு அறையில் இருந்து வெளியேறுகிறார்.
மருந்து செல்லும் குழாய் அடைக்கப்பட்டிருப்பதை பார்த்த நர்ஸ் அதை உடனடியாக சரிசெய்தார். அடுத்த 2 மாதத்தில் ராஜகோபால் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக அவரது மகனும் டாக்டர் ஜெயசுதாவின் சகோதரருமான டாக்டர் ஜெயபிரகாஷ் தனது சகோதரி மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் டாக்டர் ஜெயசுதா மீது, தந்தையை கொல்ல முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெற்ற தந்தையை டாக்டர் மகளே சொத்துக்காக கொலை செய்ய துணிந்தது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Patrikai.com official YouTube Channel