சென்னை:
சென்னை ரெயிலில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் பற்றி சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.  அதற்காக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு படைக்கும் தலா 10 பேர் நியமிக்கப்பட்டு, விசாரணை முடுக்கி விடப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Egmore Railway Station from the east, Chennai
கடந்த 8ம் தேதி இரவு சென்னை எழும்பூர் நோக்கி வந்துகொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில்  சுமார் 342 கோடி ரூபாய் சென்னை ரிசர்வ வங்கிக்காக கொண்டு வரப்பட்டது. சேலத்திலிருந்து சென்னை வரும்போது, ஓடும் ரெயிலின் கூரையில் ஓட்டை போட்டு ரூ.6 கோடியை கொள்ளையடித்த வழக்கில் இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை.
மேலும் ரெயில்பெட்டி திருப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்டபோதே, மேற்கூரையில் துளை போடப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப் படுவதாகவும் சிபிசிஐடி போலீசார் கூறினார்.
இதனிடையே, ரயில் கொள்ளை தொடர்பாக திருப்பூரில் பணிபுரிந்த வடமாநிலத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக உறுதி படுத்தப்படாத தகவல்கள் வெளியாகின.
கொள்ளை நடைபெற்ற  ரெயில் சேலத்தில் இருந்து விருத்தாசலம் வரை டீசல் என்ஜின் மூலமாகவும், அங்கிருந்து சென்னை வரை மின்சார என்ஜின் மூலமாக வழித்தடம் மாற்றி  இயக்கப்பட்டிருந்தது.
160809144733_money_train_salem_chennai_robbery_640x360__nocredit
இதன் காரணமாக, விருத்தாசலத்துக்கு பிறகு ரெயிலில் கொள்ளை அடிக்க வாய்ப்பே இல்லை என்றும், ரெயில் புறப்படும்போதே கொள்ளை அடிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கும் அல்லது சென்னை வந்து நிறுத்தி வைக்கப்பட்டபோது கொள்ளையடிக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் பல உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. ரெயில் சேலத்தில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந் போது கொள்ளை சம்பவம் நடந்திருக்கலாம்  எனவும், அப்படி நடைபெற்றிருந்தால் அது பொதுமக்கள் யாருக்காவது தெரியாமல் இருக்காது எனவும் தகவல்கள் கூறுகிறது.
இதற்கிடையில், சென்னைக்கு பணம் கொண்டுவரப்பட்ட வேகான் பெட்டி ஈரோட்டிலும், அதற்கு முன்னர் கேரளாவிலும் நிறுத்தப்பட்டிருந்தது விசாரணை யில் தெரிய வந்துள்ளது. அப்போதே  ரெயில் பெட்டியின் மேல்கூரை  துளை போடப்பட்டு, வெட்டப்பட்ட துண்டு, வெட்டப்பட்ட இடத்திலேயே ஒட்டி வைத்திருந்திருக்கலாம்  என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சிபிசிஐடியின் தனிப்படையின் ஒரு பிரிவினிர் அனைத்து ரெயில் நிலையங்களில் உள்ள காமிரா பதிவுகளை ஆராய்ந்து வருகின்றனர். அதில், தாம்பரம் ரெயில் நிலையத்தல் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் கொள்ளை நடந்த ரெயிலின் மேற்கூரை பதிவாகி உள்ளது தெரிய வந்துள்ளது. அதை மேலும் ஆராய்ந்தபோது, அதில் பணம் வைக்கப்பட்டிருந்த பெட்டியின் மேற்கூரை உடைக்கப் படாமல் இருப்பது தெரிய வந்துள்ளது.
இதன் காரணமாக, பணம் கொள்ளை போனது சென்னையில் என ஊர்ஜிதமாகிறது.  ரெயில் சென்னைக்கு வந்து, பயணிகளை இறக்கிவிட்டு, பின்னர் சேத்துப்பட்டு யார்டுக்கு செல்லும். அங்குதான்  கொள்ளை சம்பவம் அரங்கேறி இருக்கலாம் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
இதுகுறித்து, சிபிசிஐடி போலீசார் கூறியதாவது:  தாம்பரத்தில் பதிவான காமிரா காட்சிகளின் பதிவு தெளிவாக இல்லை.  அதனை  நவீன முறையில் ஆய்வு செய்து வருகிறோம்.  ஆய்வுக்குபின்னரே  எதுவும் கூறமுடியும் என்று தெரிவித்தனர்.
அதேபோல், கொள்ளையர்கள் ரெயில் பெட்டியில் பணப்பெட்டிகள் ஏற்றப்படுவதற்கு முன்னரே,  பெட்டிக்குள் பதுங்கி இருந்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் போலீசார்  நம்புகிறார்கள்.
ரெயில் சென்னை வந்து, சேத்துப்பட்டு யார்டுக்கு  வரும்வரை காத்திருந்து, அதன்பிறகு  மேற் கூரையை உடைத்து ரூ.6 கோடி பணத்தை கொள்ளைர்கள் எடுத்துச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார்  தெரிவித்தனர்.