சென்னை: மிக்ஜாம் புயல் வெள்ளம் காரணமாக  இதுவரை 28,563 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் புயல் மழையால் சேதமடைந்துள்ள பள்ளி கட்டிடங்கள் சீரமைக்கப்பட்டு வருவதால், இன்று 4 பள்ளிகள் செயல்படவில்லை என்றும் தெரிவித்தார்.

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 3ந்தேதி முதல் பலத்த மழை கொட்டியது. 4ந்தேதி புயல் சென்னையை அடுத்த ஆந்திரா கடற்கரை பகுதியில் கரையை கடந்த நிலையில், கனமழை மற்றும் சூறாவளி காற்றால்,  வடகடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

குறிப்பாக சென்னை மீண்டும் வெள்ளத்தில் மிதந்தது. மழை மற்றும் ஏரிகளில் இருந்து திறந்து விடப்பட்ட நீரால்,  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தாழ்வான இடங்களில் வெள்ளநீர் புகுந்தது.   பல இடங்களில் மரங்கள், கூரை வீடுகள் உடைந்து விழுந்து பலத்த சேதமடைந்தன. மேலும்,  பொதுமக்களின் கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களும் தண்ணீரில் மூழ்கி பழுதடைந்தன.

புயல் ஓய்ந்ததும் பேரிடர் , தீயணைப்பு துறை, காவல்துறை என அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், புயல் மழை வெள்ளம் ஓய்ந்த பிறகு,   டிசம்பர் 6-ம் தேதியில் இருந்து இதுவரை  28,563 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டு உள்ளதாக  சென்னை மாநகராட்சி  தெரிவித்துள்ளது.  மேலும், 25,113 மெட்ரிக் டன் இதர குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. 748 நடமாடும், நிலையான மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு தினசரி அடிப்படையில் மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை மேற்பார்வையிட்டு ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன். பின்னர்   செய்தியாளர்களிடம் பேசும்போது, , டிசம்பர் 6 முதல் மொத்தம் 28,563.27 மெட்ரிக் டன்கள் அகற்றப்பட்ட குப்பை மற்றும் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளது.   இதில் 3449.39 மெட்ரிக் டன் தோட்டக் கழிவுகளும், 25,113.88 மெட்ரிக் டன் வழக்கமான குப்பைகளும் அடங்கும். அனைத்து மண்டலங்களிலும் செயல்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன என்றார்.

முன்னதாக,  மண்டலம் 6   கும்பை  பரிமாற்ற நிலையத்தில்  ஆய்வு செய்த ராதாகிருஷ்ணன்,   மேலும், அருகில் உள்ள பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவ முகாமை ஆணையர் ஆய்வு செய்தார். பொது சுகாதார கவலைகளை நிவர்த்தி செய்ய மொத்தம் 748 நிலையான மற்றும் மொபைல் மருத்துவ சுகாதார முகாம்கள் தினசரி அமைக்கப்பட்டுள்ளன என்றும்,  புயல் மழையால் சேதமடைந்த சில பள்ளிகளில் சீரமைப்பு பணிகள் செயல்பட்டு உள்ளதாகவும், சீரமைப்பு பணிகள் நடைபெற்றும் வரும்  4 பள்ளிகள் மட்டும்  இன்று திறக்கப்படவில்லை என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுவரை 35,000 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆய்வு நடத்திய பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மாநகராட்சி ஆணையர் கூறினார்.கூறினார்.