சென்னை
சாலைகளில் ஏற்படும் பள்ளங்கள் மற்றும் குழிகளை உடனே சரி செய்யச் சென்னை மாநகராட்சி உத்தரவு இட்டுள்ளது.
தற்போது மழைக்காலம் என்பதால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்க அதிகம் வாய்ப்புள்ளது. குறிப்பாக சாலைகளில் ஏற்படும் பள்ளங்கள் மற்றும் குழிகளில் நீர் தேங்கி நிற்பதால் பலருக்கும் பள்ளம் மற்றும் குழுகள் சரிவரத் தெரியாமல் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இது குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதையொட்டி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளில் ஏற்படும் பள்ளம் மற்றும் குழுகளை உடனே சரி செய்ய மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இந்த சாலை பராமரிப்புக்கு மண்டல்ரீதியாக தலா ரூ.10 லட்சம் என15 மண்டலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே நடந்த ஆய்வில் நகரில் 942 சாலைகளில் பராமரிப்பு ப் அணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது தெரியவந்துள்ளது. மக்கள் சாலைகளில் உள்ள பள்ளம்,குழிகள், மற்றும் மழை நீர் தேக்கம் குறித்து 1012 அல்லது 044 25619206 ஆகிய எண்களுக்குப் புகார் அளிக்கலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.