சென்னை: சென்னையில் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறியதாக இன்று ஒரே நாளில் 5 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தனிமைப்படுத்துதல் விதிமுறைகளை மீறியவர்களுக்கு 550 ரூபாயும், பொது இடங்களில் உமிழ்ந்தால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த விதிகள் படி, தமிழகம் முழுவதும் விதிகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விதிகளை மீறியவர்களிடம் அபராதமும் விதிக்கப்படுகிறது.
அதன்படி, தலைநகர் சென்னையில் மட்டும், இன்று ஒரேநாளில் 5 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக சென்னையில் இதுவரை 2.26 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]