சென்னை: சென்னையில் பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டிய, சுவரொட்டிகள் ஒட்டிய நபர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு வருவரதாக சென்னை  மாநகராட்சி அறிவித்து உள்ளது. அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டிய நபர்களுக்கும், சுவரொட்டிகள் ஒட்டிய நபர்களுக்கும் ரூ.21,19,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019-ன்படி பொது மற்றும் தனியார் இடங்களில்  குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும், சென்னை மாநகரில் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு, அவ்விடங்களில் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும், வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் வகையிலான கண்கவரும் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில்இ சென்னை பெருநகர மாநகராட்சியை தூய்மையாகவும், அழகுடனும் பராமரிக்க பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பை மற்றும் கட்டுமான கழிவு கொட்டுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, கடந்த மார்ச் 3 முதல் 16-ம் தேதி வரை பொதுஇடங்களில் குப்பை கொட்டியவர்களுக்கு ரூ.10.78 லட்சம் அபராதம்,கட்டுமானக் கழிவு கொட்டியவர்களுக்கு ரூ.8.80 லட்சம், அரசு, மாநகராட்சி கட்டிடங்கள், பொது இடங்களில் விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டிய 805 பேருக்கு ரூ.1.62 லட்சம் என மொத்தம் மொத்தம் ரூ.21 லட்சத்து 19 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு்ளது.

எனவே, பொதுமக்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பொது இடங்களில் குப்பை, கட்டுமானக் கழிவு கொட்டுதல், பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். பொது இடங்கள் மற்றும் காலிமனைகளில் அதிக குப்பை காணப்பட்டால், மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 03.03.2023 முதல் 16.03.2023 வரை பொது இடங்களில் குப்பை கொட்டிய நபர்களுக்கு ரூ.10,77,600/- அபராதமும், கட்டுமானக் கழிவுகளை கொட்டிய  நபர்களுக்கு ரூ.8,79,900/- அபராதமும், அரசு, மாநகராட்சி கட்டடங்கள் மற்றும் பொது இடங்களில் விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டிய 805  நபர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு  ரூ.1,61,500/- அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒவ்வொரு  மண்டலத்திலும், குப்பை கொட்டியவர்களிடம் ரூ. 10,77,600   அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது என்றும் , கட்டுமான கழிவுகள் கொட்டியவர்களிடம் இருந்து 8,79,900 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும்,  இதுதொடர்பாக 805 புகார்கள்  காவல்துறையில்  பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,  சுவரொட்டிகள் ஒட்டிய நபர்களிம் இருந்து 1,61,500 ரூபாய்  அபராதத் தொகை வசூலிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது-

எனவே, பொதுமக்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டுதல், பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுதல் ஆகியவற்றை தவிர்த்து சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்க முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மீறும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

மேலும், மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்கள் மற்றும் காலிமனைகளில் அதிகக் குப்பைகள் காணப்பட்டால், பொதுமக்கள் மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு சென்னை மாநகராட்சி கூறியுள்ளது