சென்னை

சென்னையில் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாதோருக்கு நேற்று ரூ.88,300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று குறையாமல் உள்ளது.  இதையொட்டி தமிழக அரசு இந்த மாதம் 23 வரை தளர்வுகளுடன் ஊரடங்கை அறிவித்துள்ளது.  இதையொட்டி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்டப்பகுதிகளில் அதிகம் மக்கள் கூடும் இடங்களில் சென்னை மாநகராட்சி கொரோனா கட்டுப்பாட்டை முன்னிட்டு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

அவ்வகையில் சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறையினர் இணைந்து சிறப்பு அமலாகக் குழு ஒன்றை ஏற்படுத்தி தீவிரமாக கண்காணிப்பு நடத்தி வருகின்றனர்.   கொரோனா  பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதை இந்தக் குழு நகரில் உள்ள வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் கண்காணித்து வருகிறது.

அவ்வகையில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறி நடந்துள்ள தனி நபர் மற்றும் வணிக வளாகங்களில் சென்னை மாநகராட்சி அபராதம் விதித்து வருகிறது,  நேற்று ஒரே நாளில்  சென்னையின் 15 மண்டலங்களில் ரூ.88,300 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.  இதில் அடையாறு மண்டலத்தில் மட்டும் ரூ.13,600 வசூல் ஆகி உள்ளது.