சென்னை: 
பெட்ரோல் விலை குறைப்பு: ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு  முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,  பெட்ரோல் விலை ரூ3 குறைத்திருப்பது பாராட்டுக்குரியது என்றும்,  கடந்த 100 நாட்களில்  ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், அடுத்த 100 நாட்களில் மேலும் பல திட்டங்களை நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.