சென்னை:
கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுக்கும் வகையில் முககவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்தார்.

 

இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தளர்வுகள் நடைமுறைக்கு வந்துள்ளதால் நோய்த் தொற்றை கவனமாக கையாள வேண்டும். சென்னை மாநகராட்சியில் மேற்கொண்டு வரும் பரிசோதனை எண்ணிக்கை 11 லட்சத்தை நெருங்கஉள்ளது. தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் உட்பட பணிசெய்யும் இடங்களில் தொடர்ச்சியாக பரிசோதனை செய்வதை அதிகப்படுத்த உள்ளோம்.

தளர்வுகள் நடைமுறைக்கு வந்துள்ளதால் நோய்த் தொற்றை கவனமாக கையாள வேண்டும். சென்னை மாநகராட்சியில் மேற்கொண்டு வரும் பரிசோதனை எண்ணிக்கை 11 லட்சத்தை நெருங்கஉள்ளது. தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் உட்பட பணிசெய்யும் இடங்களில் தொடர்ச்சியாக பரிசோதனை செய்வதை அதிகப்படுத்த உள்ளோம்.

பொதுமக்கள் ஒத்துழைப்பு சிறப்பாக உள்ளது போன்ற காரணங்களால் வீடுகளில் தகரம் அடிப்பது நிறுத்தப்பட்டுவிட்டது. கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் வீடுகளில் இனி தகரம்அடிக்கப்படாது.சென்னையில்12,600 பேரிடம் ரத்த மாதிரி எடுத்து பரிசோதிக்கப்பட்டது. இதில்சென்னையில் 21.5% பேர் நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருப்பது தெரிய வந்தது என்றார்.