சென்னை மாநகராட்சியின் தலைமை பொறியாளர் நந்தகுமார் உள்பட உயர்அதிகாரிகள் மாற்றம்!

Must read

சென்னை: சென்னை மாநகராட்சியின் தலைமை பொறியாளர் நந்தகுமார் உள்பட உயர்அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவித்து உள்ளார்.

சென்னை மாநகரராட்சியின் தலைமை பொறியாளராக (பொது) பணியாற்றி வந்த எல்.நடந்தகுமார், தலைமை பொறியாளர் – பூங்கா துறைக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

சென்னை மாநகராட்சியின் மழைநீர் வடிகால்துறை நிர்வாக பொறியாளர் சி.திருநாவுக்கரசன், சென்னை வடக்கு மண்டல பிராந்திய துணை ஆணையராக இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

மழைநீர் வடிகால்துறை நிர்வாக பொறியாளர் கே.நிர்மலா, கட்டிட நிர்வாகத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

இதற்கான உத்தரவை ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ளார்.

 

More articles

Latest article