சென்னை: முகக்கவசம் அணியாமல் சென்றதற்காக 23,704 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை தடுக்க தலைநகர் சென்னையில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில் வாகன தணிக்கை, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: முழு ஊரடங்குக்கு மக்கள் ஒத்துழைப்பு தருகின்றனர். விதிகளை மீறியதாக 52,234 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முகக்கவசம் இன்றி சென்ற 23,704 பேர் மீது வழக்கு பதிவாகி இருக்கிறது.

இ பாசை தவறாக பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களை போலீசார் அடிப்பது மிகவும் தவறான ஒன்றுல். பொது மக்களை தாக்குவதும், துன்புறுத்துவதும் சட்டப்படி தவறு.

அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வாகனத்தை பயன்படுத்த பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,065 போலீசாரில் 410 பேர் குணம் பெற்றுவிட்டனர்  என்று கூறினார்.