கோயம்புத்தூர்

நேற்று கோவையில் நடந்த ஹீரோ ஐ கால்பந்து தொடரில் சென்னை சிடி அணி மினர்வா பஞ்சாப் அணியை வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

நேற்று கோவையில் அமைந்துள்ள நேரு விளையாட்டு அரங்கில் ஹீரோ ஐ லீக் கால்பந்து தொடரின் இறுதி ஆட்டம் நடந்தது. இதில் சென்னை சிடி அணியும் மினர்வா பஞ்சாப் அணியும் மோதின. இந்த போட்டியில் விளையாடிய சென்னை சிடி அணி ஏற்கனவே 19 போட்டிகளில் கலந்துக் கொண்டிருந்தது. இது இந்த அணிக்கு 20 ஆம் போட்டியாகும்.

நேற்று நடந்த இறுதிப் போட்டியில் ஆட்டம் தொடங்கிய 3 ஆம் நிமிடத்தில் மினர்வா பஞ்சாப் அணி தனது முதல் கோலை அடித்தது. அதை தொடர்ந்து சென்னை சிடி அணி மும்முரமாக விளையாடியது.

ஆயினும் சென்னை சிடி அணியினரை கோல் அடிக்க விடாமல் மினர்வா பஞ்சாப் அணியினர் தடுத்து விளையாடினர். முதல் பாதி ஆட்ட முடிவில் மினர்வா பஞ்சாப் அணி 1-0 என்னும் கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இரண்டாம்பாதி ஆட்டத்தில் சென்னை சிடி அணி வீரர்கள் மேலும் தீவிரமாக ஆடினார்கள். இந்த ஆட்டத்தின் 58 ஆம் நிமிடத்தில் மினர்வா பஞ்சாப் அணியின் வீரர் ஆகாஷ் தீப் கையால் பந்தை தடுத்தார்.

அதனால் சென்னை சிட்டி அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அது சென்னை சிடி அணிக்கு ஒரு கோலை பெற்று தந்து இரு அணிகளும் 1-1 என்னும் சமமான கோல் கணக்கில் இருந்தன.

ஆட்டத்தின் 69 ஆம் இடத்தில் சென்னை சிடி வீரர் கவுரவ் போரா அணியின் இரண்டாம் கோலை அடித்தார். இதை ஒட்டி சென்னை அணி முன்னேறி 2-1 என்னும் கோல் கணக்கில் இருந்தது. இறுதியாக காயங்களுக்கு இழப்பீடாக 5 கூடுதல் நிமிடங்கள் அளிக்கப்பட்டன.

இந்த கூடுதல் 5 நிமிடத்தில் 3 ஆம் நிமிடத்தில் கவுரவ் போரா அணியின் மூன்றாம் கோலை அடித்ததில் சென்னை சிடி அணி 3-1 என்னும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த போட்டியுடன் 43 புள்ளிகளை பெற்ற செனைசிடி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.