சண்டிகர்: ஐ லீக் கால்பந்து தொடரில் சென்னை சிட்டி அணி, 1-3 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் அணியிடம் தோற்றுப்போனது.

உள்நாட்டு கால்பந்து தொடர்களில் ஒன்றான ஐ லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இத்தொடரில், சென்னை சிட்டி அணி தனது இரண்டாவது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது.

பஞ்சாப் மண்ணில் நடைபெற்ற இப்போட்டியில், முதல் பாதி கோல்களின்றி முடிந்தது. இரண்டாவது பாதியில், பஞ்சாப் அணி 3 கோல்களும், சென்ன‍ை அணி 1 கோலும் அடித்தது.

பஞ்சாப் அணி தனது வெற்றி கோல்களை ஸ்டாப்பேஜ் நேரத்தில் அடித்தது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் சென்னை அணி பரிதாபத் தோல்வி அடைந்தது.

[youtube-feed feed=1]