சென்னை:

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம்  ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்த  பிரபல ரவுடி இம்ரான் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

ராயப்பேட்டையில் பகுதியில் வசித்து வருபவர்  பிரபல தொழிலதிபர் மக்பூல் பாஷா. இவருக்கு பல்வேறு தொழில்கள் உள்ளன. இவரிடம், தனக்கு ரூ. 50 லட்சம் தர வேண்டும் என்று  ஐஸ்அவுஸ் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி இம்ரான் மிரட்டல் விடுத்து வந்தார்.

இம்ரானின் தொல்லை தாங்காமல், தொழிலதிபர் மக்பூல் பாஷா ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து காவல்துறையினர் இம்ரானை பிடிக்க வியூகம்  வகுத்தனர். ஜே.சி. சுதாகர் தலைமையிலனா தனிப்படை அமைக்கப்பட்டு இம்ரானின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று இரவு இம்ரானை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இம்ரான் ஏற்கனவே காங்கிரஸ் பிரமுகர் அப்பாஸ் கொலை வழக்கில் முக்கிய பங்காற்றியவர்.  இவர் ஐஸ்அவுஸ் பகுதியில் உள்ள  உள்ள பிரியாணி கடைகளில் மாதா மாதம் மாமூல் வாங்கி வருவதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.