சென்னை: தமிழ்நாட்டில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதாக குற்றம் சாட்டப்படும் நிலையில், அதை உறுதி செய்யும் வகையில் காவல்துறை தகவல்கள் வெளியாகி உள்ளது.
மாநிலத்தின் தலைநகரான சென்னையில் மட்டும் , கடந்த 8 மாதங்களில் போதைப் பொருள் விற்பனை தொடர்பாக 1,004 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கல்லூரி மாணவர்கள், திரைப்பட ஜூனியர் கலைஞர்கள், வெளிநாட்டினர் என 2 ஆயிரத்து 774 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்க திமுக ஆட்சி பதவி ஏற்றது முதல் பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்து வருகிறது. ஆனால், இதுவரை, போதை பொருள் நடமாட்டத்தை குறைக்க முடியவில்லை. பூங்காங்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், கூவம் அற்றின் கரையோரம் என பல பகுதிகளில் போதை பொருள் விற்பனை ஜரூராக நடைபெற்று வருகிறது. இந்த விற்பனையில் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களே ஈடுபட்டு வருவதால், அவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதில் காவல்துறை மெத்தனம் காட்டி வருகிறது.
இந்த நிலையுல் சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் பதவி ஏற்றதும், போதை பொருள் நடமாட்டத்தை தடுக்கஇ,‘ போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவை துவக்கினார். இப்பிரிவில் உதவி கமிஷனர், 2 காவல் ஆய்வாளர்கள், 5 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 30 போலீசார் உள்ளனர்.
இந்த டீம், போதைப்பொருள் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, கடந்த 8 மாதங்களில் போதைப் பொருள் விற்பனை தொடர்பாக 1,004 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கல்லூரி மாணவர்கள், திரைப்பட ஜூனியர் கலைஞர்கள், வெளிநாட்டினர் என 2 ஆயிரத்து 774 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, மெத்தாம்பேட்டமைன் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 71 நெட்வொர்க்குகள் அடையாளம் காணப்பட்டன. மேலும் 464 பேர் கைது செய்யப்பட்டனர். மும்பை, டெல்லி, பெங்களூரு ஆகிய நகரங்களிலிருந்து மெத் கடத்தி வந்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
2 வாரங்களுக்கு முன்பு, அண்ணா சாலை மற்றும் திருவல்லிக்கேணி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில் 7 நைஜீரியர்கள், சூடான் நாட்டினர் என 8 பேர் கைது செய்யப்பட்டனர். மொத்தத்தில், 22 வெளிநாட்டினர் மெத் விற்பனையில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, 21.90 கிலோ மெத் ஆம்பெட்டமைன், 1.60 கிலோ மெத்தகுலோன், 39.10 கிலோ கேட்டமைன், 213 கிராம் ஹெராயின், 67.14 கிராம் கோகைன், 1,215 கிலோ கஞ்சா, 51,229 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், 90 மொபைல் போன்கள், 12 இருசக்கர வாகனங்கள், 8 நான்கு சக்கர வாகனங்கள், 51 லட்சம் ரூபாய், மடிக்கணினி, 63.60 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த ஆண்டு போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த 300 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்தாண்டு 52 பேர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கூறியுள்ளனர்.
தமிழ்நாட்டை போதை பொருள் மையமாக மாற்றி இருப்பதற்கு திமுகஅரசே காரணம்! எடப்பாடி பழனிச்சாமி
குட்கா – போதை பொருள் விற்பனை: 11 மாதத்தில் 21,761 வழக்குகள், 20ஆயிரம் கடைகளுக்கு சீல்! டிஜிபி தகவல்…
சென்னையில் கொடிகட்டி பறக்கும் போதை பொருள் வியாபாரம்! டோர் டெலிவரி செய்த 4 பேர் கொண்ட கும்பல் கைது..