ஷார்ஜா: சென்னை அணிக்கு எதிரான போட்டியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது டெல்லி அணி.
டெல்லி அணியின் ஷிகர் தவான் இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்று சதம் அடித்தார்.
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை எடுத்தது.
அடுத்து களமிறங்கிய டெல்லி அணியில், துவக்க வீரர் பிரித்விஷா டக்அவுட் ஆனார். அதேசமயம், மற்றொரு துவக்க வீரர் ஷிகர் தவான் 58 பந்துகளை சந்தித்து 1 சிக்ஸர் & 14 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் அடித்தார்.
ஷ்ரேயாஸ் 23 ரன்கள் மட்டுமே அடித்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவையென்ற நிலையில், 7வது விக்கெட்டாக களமிறங்கிய அக்ஸர் படேல் 3 சிக்ஸர்களை விளாசி சென்னை அணியை காலிசெய்துவிட்டார்.
அவர் 5 பந்துகளில் 21 ரன்களை அடித்தார். இறுதியில், 19.5 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை எடுத்து வென்றது டெல்லி அணி.
இத்தொடரில், சென்னையை இரண்டாவது முறையாக வென்றுள்ளது டெல்லி அணி.