சென்னை:

துபாயில் சிக்கியுள்ள இந்தியர்களில் 359 பேர் சிறப்பு விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர்.

கொரோனா பரவல் காரணமாக சர்வதேச அளவில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தின. வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா நிறுவனம் முதற்கட்டமாக கடந்த 7-ஆம் தேதி முதல் வரும் 13-ஆம் தேதி வரை சிறப்பு விமானங்களை இயக்கியது.

அதன்படி, துபாயில் இருந்து சென்னைக்கு நள்ளிரவில் வந்தடைந்த முதல் விமானத்தில் 182 பேரும், 2-ஆவது விமானத்தில் 177 பேரும் அழைத்து வரப்பட்டனர். கொரோனா சோதனையை தொடர்ந்து அவர்கள் சிறப்பு மையங்கள் மற்றும் தனியார் விடுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

இந்த விமானத்தில் பயணிக்க டிக்கெட் எடுத்திருந்த 8 பயணிகள் இதில் பயணிக்கவில்லை. இதையடுத்து காத்திருப்பவர்கள் பட்டியலில் இருந்த 8 பேர் இந்த விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இவர்கள் சென்னை வந்திறங்கிய போது, விமான நிலையத்திற்கு வெளியே காத்திருந்த மருத்துவ குழுவினர் அவர்களை தனிமைப்படுத்தும் முகாமிற்க்கு அழைத்து சென்றனர். இந்த முகாமில் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளனர். இந்த பயணிகள் அவர்கள் விரும்ப்பினால் அரசு மருத்துவ முகாமில் தங்கலாம். இதை விரும்பாவிட்டால், அவர்க்ள் நடுத்தர வகையான மற்றும் ஸ்டார் ஹோட்டல்களில் பணம் கொடுத்து தனியாக தங்கி கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

High detailed 3d render

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோயம்புத்தூரை சேர்ந்த பயணி ஜோஸ்வா, இரண்டாவது விமானத்தில் வந்த அனைவரும் அதிகாலை 2 மணியளவில் இந்தியா வந்தடைந்தோம். எங்கள் அனைவருக்கும் ஐந்து மணி நேரத்திற்கு முன்பு கொரோனா பரிசோதனையான ரேபிட் டெஸ்ட் செய்யப்பட்டது. பேக்கேஜ்களையும் சோதனை செய்த அதிகாரிகள், உணவு, தண்ணீர் போன்றவைகளையும் சீட் அருகிலேயே வைத்திருந்தனர். இதுமட்டுமின்றி, விமான பயணம் முழுவதும் தண்ணீர் மட்டுமே கொடுக்கப்படும் என்று விமான அதிகாரிகள் அறிவித்தனர். இமிகிரேசனுக்கு முன்பு பயணிகள் அனைவரும் தெர்மல் ஸ்கிரீனிங் சோதனை செய்யப்பட்டது என்றும் அவர் கூறினார்.

தனிமைபடுத்துதலை பதிவு செய்ய சுமார் 15 கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. அதில் மூன்று ஆப்சன்கள் கொடுக்கப்பட்டது. அதில் நான் மீடியம் கிளாஸ் ஆப்சனை தேர்வு செய்து, நாள் ஒன்றுக்கு ஆயிரத்து 500 ரூபாய் கொடுக்க ஒப்பு கொண்டேன். இதையடுத்து எம்மோரில் உள்ள ஹோட்டலுக்கு என்னை புதிய எம்டிசி பஸ்ஸில் ஏற்றி அனுப்பி வைத்தனர். அதிகாலை நான்கு மணிக்கே எங்களுக்கு பாக்ஸ்களில் அடைக்கப்பட்ட காலை உணவு கொடுக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.