செனனை

நாளை சென்னை தீவுத்திடலில் பொருட்காட்சி தொடங்குகிறது.

ஒவ்வொரு அண்டும் சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கமாகும். அவ்வகையில், இந்த ஆண்டும் பொருட்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை மாலை 5 மணிக்கு 48வது இந்தியச் சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை, சென்னை தீவுத்திடலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

பொதுமக்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் கட்டணமின்றி பொருட்காட்சியைப் பார்வையிடலாம். பிறகு 14 ஆம் தேதி முதல் பெரியவர்களுக்கு ரூ.40, சிறியோருக்கு ரூ.25 கட்டணம் செலுத்த வேண்டும். 5 வயதுக்குக் குறைவானோருக்கு கட்டணம் கிடையாது.