சென்னை:

பொறியியல் படிப்பில் சேர வேதியியல் பாடம் கட்டாயம் இல்லை என்று ஏ.ஐ.சி.டி.இ. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. “இயற்பியல் , கணிதம், உயிரியல் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் படிந்திருந்தால் போதும்” என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2020-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் பொறியியல் கல்லூரிகள் தொடங்க அனுமதி கிடையாது என ஏஐசிடிஇ அறிவித்துள்ள நிலையில், பொறியியல் படிப்பில் சேர வேதியியல் பாடம் கட்டாயம் இல்லை என்றும், இயற்பியல், கணிதம், உயிரியல் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் படிந்திருந்தால் போதும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பொறியியல் கல்லூரிகளின் கள நிலவரம் குறித்து ஆராய, ஐதராபாத் ஐஐடி தலைவர் பிவிஆர் மோகன் ரெட்டி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் அறிக்கை வெளியிட்டு உள்ளது.

இக்குழுவின் பரிந்துரைகளின்படி , 2020-21 ஆண்டு முதல் பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை என ஏஐசிடிஇ  அறிவித்தது. எனினும்,இளநிலைப் படிப்புகளில் செயற்கை புலனாய்வு, ரோபோடிக்ஸ், தரவியல் விஞ்ஞானம் மற்றும் சைபர் செக்யூரிட்டி ஆகிய புதிய படிப்புகளை அனுமதிக்கலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

2020-க்கு பின் பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை என்றும் அறிவித்து உள்ளது.

#Engineering | #Chemistry