2022 நவம்பர் மாதம் புதிதாக வெளியான சாட்ஜிபிடி செயலி உலகெங்கும் 10 கோடிக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ளது.

இதன் சமீபத்திய வெர்ஷன் ஜிபிடி4 பல்வேறு புதிய அம்சங்களைக் கொண்டுள்ளது.

உள்ளிடும் வார்த்தைகளுக்கான விவரங்களை மட்டுமன்றி கையெழுத்து, ஓவியம், படம் உள்ளிட்ட உள்ளீடுகளுக்கும் பதிலளிக்கிறது.

இதனால் வெப்டெவலப்பர் உள்ளிட்ட கணினித்துறை சார்ந்த பல்வேறு பணியில் உள்ளவர்கள் பயத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் சாட்ஜிபிடி செயலியை இத்தாலியில் பயன்படுத்த அந்நாட்டு ஒழுங்குமுறை ஆணையங்கள் தடைவிதித்துள்ளது.

செயலியில் பயனர்களின் வயது விவரங்கள் பதிவிடப்படுவதில்லை என்பதால் வயதுக்கு மீறிய விவரங்களை சிறுவர்கள் பார்க்க நேரிடுகிறது.

வயதுக்கு ஏற்ற பதிலை இதன் மூலம் பெற முடிவதில்லை என்பதால் இந்த செயலி ஒரு முழுமையான பாதுகாப்பான செயலியாக இல்லை என்று கூறி இதை தடைசெய்துள்ளது.

தாங்கள் குறிப்பிட்டுள்ள அம்சங்களை சரிசெய்த பின் இத்தாலியில் அனுமதிப்பது குறித்து முடிவெடு்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.