டில்லி

நீதிபதிகள் நியமனம் தொடர்பான அதிகார அமைப்பான கொலீஜியத்தில் மாற்றங்கள் ஏற்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 34-ஆக உள்ளது. இவர்களில் நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி ஆகியோர் கடந்த 17ம் தேதி ஓய்வு பெற்றனர். இன்று மற்றொரு நீதிபதியான வெ.ராமசுப்பிரமணியன் ஓய்வு பெற்றார்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பொறுப்பேற்றது முதல் புதிய நீதிபதிகளை நியமிக்க வேண்டிய பொறுப்பு சந்திரசூட் தலைமையிலான கொலீஜியத்துக்கு உள்ளது.

ஓய்வு பெற்ற மூன்று நீதிபதிகளும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலீஜியத்தில் இடம் பெற்றிருந்தனர்.

இந்த ஆண்டு இறுதிக்குள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ண முராரி, எஸ்.ரவீந்திர பட் , எஸ்.கே.கவுல் ஆகியோர் அடுத்தடுத்து ஓய்வு பெறுகின்றனர். இவ்வாறு நீதிபதிகள் அடுத்தடுத்து பணி ஓய்வு பெறுவதன் காரணமாக, கொலீஜியத்தில் மாற்றம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.