டெல்லி: தடுப்பூசி கொள்கையில் மத்தியஅரசு புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. ஜூன் 21-ம் தேதி முதல் மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

கொரேனா தொற்று பரவலை தடுக்கும் தடுப்பூசி விவகாரத்தில் மத்தியஅரசின் முடிவை உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியது. மேலும், மத்தியஅரசு, மாநில அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு வெவ்வேறு விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதை கண்டித்ததுடன், நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போட வேண்டும் எனவும் அறிவுறுத்தியது.

இந்த நிலையில், இன்று (மே 7ந்தேதி)  மாலை மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, ஜூன் 21-ம் தேதி முதல் மாநிலங்களுக்கு தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்க தொடங்கும் என அறிவித்து உள்ளார்.

மே மாதம் முதல் தடுப்பூசி கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. தடுப்பூசி விஷயத்தில் மத்திய அரசே முடிவெடுக்கும். மாநிலங்களின் கோரிக்கையின்படி தடுப்பூசி முழுவதும் இலவசமாக வழங்கப்படும். இனி கொரோனா தடுப்பூசிக்காக மாநிலங்கள் செலவு செய்ய வேண்டியதில்லை. இந்தியாவில் உற்பத்தியாகும் தடுப்பூசிகளில் 25% தனியார் மருத்துவமனைகள் வாங்கி மக்களுக்கு செலுத்தலாம்.

தடுப்பூசி விநியோகத்திற்கான மாநில அரசுகளின் 25% பங்கையும் மத்திய அரசே ஏற்கும். மாநில அரசுகள் இனி தனியாக தடுப்பூசியை கொள்முதல் செய்ய வேண்டியதில்லை. தனியாருக்கு போக மீதமுள்ள 75% தடுப்பூசிகளை மத்திய அரசே விலைக்கு வாங்கி மாநிலங்களுக்கு அளிக்கும்.

இதுவரை மொத்தம் 7 நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் உள்ளன. 3 நிறுவனங்கள் தங்களுடைய பணிகளை முடிக்கும் நிலையில் உள்ளன.  இந்தியாவில் உற்பத்தியாகும் தடுப்பூசிகளில் 75 சதவிகிதத்தை மத்திய அரசு வாங்கி மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும். இந்தியாவில் தாயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் 25% தடுப்பூசிகளை  நிறுவனங்கள் வாங்கலாம். தடுப்பூசிகள் குறித்த வதந்திகளை பரப்ப வேண்டாம்

இவ்வாறு அவர் கூறினார்.

தடுப்பூசிக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 35000 கோடிக்கு கணக்கை காட்டுங்க! மோடிஅரசுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்…

கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் குளறுபடி! மத்தியஅரசை கடுமையாக சாடிய உச்சநீதிமன்றம்…