ஸ்ரீஹரிகோட்டா:

ந்திரனுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் செப்டம்பர் 7ம் தேதி நிலவில் தரையிறங்கும் என்று இஸ்ரோ தலைவர் சிவன்பிள்ளை கூறியுளார்.

நிலவை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில் சந்திரயான்-2 விண்கலம் கடந்த கடந்த ஜூலை 22-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.  தற்போது 5 முறை நிலை உயர்த்தப்பட்டுள்ள சந்திரயான்-2  நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யும் வகையில் ஆகஸ்டு 14 முதல் நிலவை நோக்கி தனது பயணத்தைத் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ மையத் தலைவர் கே.சிவன், சந்திரயான்-2 ஆகஸ்டு14-ஆம் தேதி அதிகாலை 3:30 மணியளவில் நிலவை நோக்கிய பயணத்தைதொடங்க உள்ளது என்று கூறினார்.

தொடர்ந்து, ஆகஸ்டு 20-ஆம் தேதி முதல் நிலவின் சுற்றுவட்டப் பாதை சுற்றிவரும் பணியை செய்யும் என்றும், இதையடுத்து செப்டம்பர் 7-ஆம் தேதி திட்டமிட்டுள்ளபடி நிலவின் தென்துரு வத்தில் தரையிறங்கி ஆய்வுகளை மேற்கொள்ளும் என்றார்.

இந்த விண்கலத்தில் உள்ள  ஆர்பிட்டர் என்ற அமைப்பு ஓராண்டுக்கு நிலவை சுற்றிவந்தபடியும், லேண்டர் அமைப்பு நிலவில் தரையிறங்கி, இறங்கிய இடத்தில் இருந்தபடியே 14 நாள்களுக்கும், ரோவர் என்ற 6 சக்கரங்களைக் கொண்ட வாகனம் நிலவின் தரைப் பரப்பில் 14 நாள்கள் 500 மீட்டர் வரை நகர்ந்து சென்றும் ஆய்வுகளை மேற்கொள்ளும்.

இவ்வாறு அவர் கூறினார்.